குஜராத்தில் 242 பேருடன் விமானம் வெடித்தது ஏன் ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert
June 13, 2025 | by newsmessagers@gmail.com

#Partnership குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் 242 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கி இருப்பது மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது.
ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து ஏர் இந்தியா ஏ171 என்ற விமானம் இன்று மதியம் 1:39 மணிக்கு 23வது நம்பர் ரன்வேயில் இருந்து லண்டனின் கேட்விக் gatwick ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டது.
விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
பயணிகளை பொறுத்தவரை 169 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள். இது தவிர கனடாவை சேர்ந்த ஒருத்தர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேரும் விமானத்தில் இருந்தனர்.
ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆன அடுத்த சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது.
ஏர்போர்ட் பக்கத்தில் மேகானிநகர் meghaninagar என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
தரையில் மோதியதும் 242 பயணிகளுடன் விமானம் வெடித்து சிதறியது. இதில் மொத்த விமானமும் தீப்பிடித்து எரிந்தது.
விமானம் தாழ்வாக பறந்து தரையில் மோதி வெடிக்கும் வீடியோ வெளியாக நெஞ்சை பதற வைத்துள்ளது.
விமானம் தரையில் விழுந்து வெடித்ததும் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் கிளம்பியது. 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
தீயணைப்பு வீரர்களுடன் போலீசார், பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமானம் தரையில் மோதிய சில நிமிடங்களிலேயே கிட்டத்தட்ட முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டது.
விமானம் விபத்தில் சிக்கியதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், விமானம் வெடிப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அதாவது, மதியம் 1:39 மணிக்கு விமானம் டேக் ஆப் ஆக ஆரம்பித்த சில நிமடங்களிலேயே கோ-பைலட் மேடே Mayday அலர்ட் கொடுத்துள்ளார்.
மேடே அலர்ட் என்பது பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் நேரும் போது பைலட்கள் கொடுக்கும் அலர்ட்.
மேடே மேடே என்று பயணிகளை பைலட்கள் எச்சரிப்பார்கள்.
அப்படி தான் விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் வான் கட்டுப்பாட்டு மையத்துக்கு கோ-பைலட் மேடே அலர்ட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் மறுகணமே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்து விட்டது.
அதாவது, மேடே அலர்ட் கொடுத்த மறுகணமே தரையில் விழுந்து விமானம் வெடித்திருக்க வேண்டும் என்று வான் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் இப்படியொரு கோர விபத்து நடந்தது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் வெடித்து சிதறியது.
அப்போது விமானம் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது. அப்போதும் விமான பைலட்கள் மேடே அலர்ட் கொடுத்தனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்து சிதறி விட்டது. ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
ஆமதாபாத் விமான விபத்தும் மேடே அலர்ட் கொடுத்த சில நொடிகளில் நடந்திருக்கிறது. 242 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல் தெரிவித்தனர். தேவையான நடவடிக்கைகளை எடுக்க குஜராத் முதல்வருக்கும், விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கும் உத்தரவிட்டனர்.#ahmedabadplanecrash #A171AIFlight #maydayalert #dinamalar
source
RELATED POSTS
View all